For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

NEET நுழைவு தேர்வு!… இன்றே கடைசி நாள்!… மிஸ் பண்ணிடாதீங்க!

05:10 AM Mar 09, 2024 IST | 1newsnationuser3
neet நுழைவு தேர்வு … இன்றே கடைசி நாள் … மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

NEET : இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (மார்ச் 9) கடைசி நாளாகும்.

Advertisement

இந்தாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு 2024, மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மார்ச் 9) கடைசி நாளாகும். நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் (பொது மருத்துவம்), பி.டிஎ.ஸ் (பல் மருத்துவம்), பி.எஸ்.எம்.எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் , முதுகலை மருத்துவப் படிப்புகளிலும் சேர மத்திய அரசு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இதுவரை அளவில் 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். https://exams.nta.ac.in/NEET என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஓ.டி.பி பெற முடியாமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தேசிய தேர்வு முகமை அந்த சிக்கலை சரி செய்தது. இந்நிலையில் இந்தாண்டு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

Readmore: மன்னிப்பு கேட்ட IRCTC..! வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை!…

Tags :
Advertisement