'அவரும் என் தாயே' நீரஜ் சோப்ராவின் அம்மாவுக்கு பதில் அனுப்பிய பாகிஸ்தான் வீரர்..!! எல்லை தாண்டி இதயங்களை வென்ற பதிவு..
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். இதுவே அவரது ஒலிம்பிக் பெஸ்ட் என்பது கவனிக்கத்தக்கது. இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது வெற்றியை இந்திய தேசமே கொண்டாடி வருகிறது.
இதுகுறித்து நிரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி அளித்த பேட்டியில், “எங்களுக்கு வெள்ளிப் பதக்கமும் தங்கத்துக்கு ஈடானதே. தங்கம் வென்றவரும் என் பிள்ளை தான். நீரஜ் காயமடைந்தார், காயத்துடன் அவர் பெற்றுத்தந்த இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தடகள வீரரின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீரஜ் வரும்போது அவருக்குப் பிடித்த உணவை சமைத்து வைப்பேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், அதற்கு பதிலளித்த நதீம், அவருக்காகபிரார்த்தனை செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவரும் தனக்கு தாய் போன்றவர் என்றும் கூறி நெகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஒரு தாய் அனைவருக்கும் தாய், அவர் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். நாங்கள் இருவரும் தென்னக வீரர்கள் மட்டுமே.. நீரஜ் சோப்ராவின் அம்மாவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர் என் அம்மாவும் கூட எனக் கூறியிருந்தார்.
Read more ; ஆண்களுக்கும் உரிமைத்தொகையா..? நான் அப்படி சொல்லவே இல்லை..!! ட்விஸ்ட் வைத்த அமைச்சர்..!!