ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா..? இனி ஈசியா செய்யலாம்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இதில் ஏதாவது மாற்றங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மொபைல் எண் தேவை. நம்முடைய மொபைல் எண்ணை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அதற்கு முதலில் ஆதார் அமைப்பின் uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அதில் locate enrollment center என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில், உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தின் முகவரி இருக்கும்.
இப்போது நீங்கள் அந்த ஆதார் மையத்தை அணுகி மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து 50 ரூபாய் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த செயல்பாடு விரைவில் முடிக்கப்பட்டு உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். தற்போது உங்களின் புதிய மொபைல் எண் ஆதார் கார்டில் அப்டேட் ஆகி இருக்கும்.
Read More : உங்கள் சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டதா..? அப்படினா உடனே இந்த விஷயத்தை பண்ணுங்க..!!