For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புது வருடத்தில் மகிழ்ச்சி பொங்கி செல்வம் பெருகனுமா.? வாஸ்து படி நீங்கள் வளர்க்க வேண்டிய செடிகள்.!

05:15 AM Dec 24, 2023 IST | 1newsnationuser4
புது வருடத்தில் மகிழ்ச்சி பொங்கி செல்வம் பெருகனுமா   வாஸ்து படி நீங்கள் வளர்க்க வேண்டிய செடிகள்
Advertisement

இன்னும் ஒரு வாரத்தில் புது வருடம் பிறக்க இருக்கிறது. அனைவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் 2024-ம் ஆண்டின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வருகின்ற ஆண்டில் செல்வ வளம் பெருக வேண்டும், அமைதி நிலவ வேண்டும் மற்றும் சந்தோசம் திளைக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இவை நடக்க வேண்டும் என்றால் புத்தாண்டு தொடக்கத்திலிருந்து சில செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புது வருட தொடக்கத்தில் இருந்து இந்தச் செடிகளை வீட்டில் வளர்க்கும் போது செல்வ செழிப்போடு நேர்மறை சிந்தனைகளும் பெருகும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

Advertisement

புதிய வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மூங்கில் செடியை வீட்டில் வளர்ப்பது செல்வ வளத்தை அதிகரிப்பதோடு நேர்மறை சிந்தனைகளையும் வீட்டிற்கு கொண்டு வரும். மேலும் இந்தச் செடிகளை வளர்க்கத் தொடங்குவதால் வீட்டில் தொழில் வளம் அதிகரிப்பதோடு பண வரவும் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்தூரியம் செடியானது வாஸ்து சாஸ்திரத்தில் அதிர்ஷ்ட செடியாக பார்க்கப்படுகிறது. ஒருவர் மாற்றங்கள் வேண்டி புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த செடியை வளர்க்கும் போது அதிர்ஷ்டம் மகிழ்ச்சி செழிப்பு மற்றும் அமைதி தேடி வரும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்து.

பொன்சாய் மரம் மற்றொரு அதிசயம் மற்றும் அதிர்ஷ்ட செடியாகும். 2024 ஆம் ஆண்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் பெருக வேண்டும் என்று நினைத்தால் புத்தாண்டின் தொடக்கத்திலேயே இந்த செடியை வீட்டில் வாங்கி வளருங்கள். இது செல்வத்தின் கதவை திறந்து வைக்கும் மேலும் எதிர்மறை எண்ணங்களை வீட்டிலிருந்து அடியோடு வெளியேற்றும். பெரும்பாலானவர்கள் வீட்டில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவர்கள் தங்கள் வீட்டில் பீஸ் லில்லி வாங்கி வளர்க்க வேண்டும். இந்தச் செடி அதன் பெயருக்கு ஏற்றார் போலவே அமைதி மற்றும் மகிழ்ச்சியை வீட்டில் என்றென்றும் குடி கொண்டு இருக்கச் செய்யும்.

Tags :
Advertisement