அவசர தேவைக்கு பணம் வேண்டுமா..? இனி ஆதார் கார்டு போதும்..!! ரூ.10,000 கடன் வாங்கலாம்..!!
வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும், பான் அட்டையைப் பெறுவதற்கும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை இப்போது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஒரு முக்கியமான ஆவணமாகும். சரிபார்க்கப்பட்ட அடையாள மற்றும் முகவரிச் சான்றாகச் செயல்படும் ஆதார் அட்டை தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் பயணம், திருமணம், மருத்துவம், கல்வி மற்றும் கடன் ஒருங்கிணைப்பு கடன்கள் உள்ளிட்ட பல்வேறு தனிநபர் கடன்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நீங்கள் தேர்வு செய்யலாம். ஆதார் அட்டை உங்கள் அடையாளம் மற்றும் முகவரி விவரங்களுக்கான சரிபார்ப்பின் முக்கிய வடிவமாக செயல்படுகிறது.
இந்நிலையில் தான், ஆதார் கார்டை வைத்து தனி நபர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் அடிப்படையிலான லோனில் ரூ.10,000 ரூபாய் வரை லோன் வழங்கப்படுகிறது. உடனடியாக பணத் தேவைப்படுவோர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கடனை சம்பளம் பெறுபவர்கள், சுய தொழில் தொடங்குபவர்கள் அல்லது குறைந்த கடன் கொண்ட தனிநபர்கள் பெறலாம். இந்த கடனுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 60 வயதுடையவராக இருக்க வேண்டும். மாதம் குறைந்தபட்சம் ரூ.15,000 சம்பளம் பெற வேண்டும்.
ஆதார் கார்டை வைத்து ரூ.10,000 பெறுவது எப்படி..?
* முதலில் உங்கள் கடன் வழங்குனரைத் தேர்வு செய்ய வேண்டும். ஆதார் கார்டை வைத்து தனி நபர் கடன்களை வழங்கும் வங்கி, NBFC நிறுவனங்கள் அல்லது ஃபின்டெக் தளங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* கடன் வழங்குனரின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அப்ளிகேஷனை பார்வையிட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
* பின்னர், உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு அல்லது வருமானச் சான்று போன்ற பிற தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, கேஒய்சி சரிபார்ப்புக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* உங்கள் விவரங்களை கடன் வழங்குநர் சரிபார்ப்பார்கள். பின்னர், கடன் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
கவனிக்க வேண்டியவை
நம்பகமான தளங்களைத் தேர்வு செய்ய வேண்டும். கடன் வழங்குபவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில தவணைகளை நீங்கள் செலுத்த தவறினால், புகைப்படத்தை தவறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே தான், ஆர்பிஐயால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குனரிடம் கடன் பெற வேண்டும். அதோடு, கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Read More : ”தமிழ்நாட்டிற்கே பெருமை”..!! இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!