வெள்ளம் நிலச்சரிவால் நிலைகுலைந்த பிலிப்பைன்ஸ்..! கொத்து கொத்தாக சடலங்கள்.. 130-ஐ தாண்டிய உயிரிழப்பு..!!
பிலிப்பைன்ஸ் வடமேற்கு பகுதியில் ட்ராமி புயல் காரணமாக இதுவரை 130 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 -க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது, தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டங்கள் இருக்கும் பகுதியில் இந்தாண்டு வீசிய அழிவுகரமான புயல் என்று கூறப்படுகிறது.
பல இடங்களில் வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், அவசர உதவிக் குழு, மோப்ப நாய்கள் ஆகியவற்றின் உதவியுடன் காணாமல் போன மக்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. சேற்றில் புதைந்த பலரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
பிலிப்பின்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் மிகவும் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு மணிலாவில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். புயல் வீசிய பகுதிகளில் 42 லட்சம் மக்கள் வரை வசிப்பதாகவும், அதில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பிலிப்பின்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புயல் அதன் திசையில் இருந்து விலகாவிட்டால் வாரயிறுதியில் வியட்நாமைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலுக்கும் தென் சீனக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டமான பிலிப்பின்ஸை ஆண்டுதோறும் சுமார் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டில், பதிவுசெய்யப்பட்ட வெப்பமண்டல புயல்களில் ஒன்றான ஹையான், 7,300 க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்து பல கிராமங்களைத் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது.
Read more ; இரவில் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! காலையில் கட்டாயம் இது இருக்கணும்..!!