என்.டி.ஏ. கூட்டணி தலைவரானார் பிரதமர் மோடி!!
NDA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் ஜுன் 4 ஆம் தேதி வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA - என்டிஏ) தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்தனர். அதன் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
NDA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எம்.பி க்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடியை தேர்வு செய்ய வேண்டுமென அமித்ஷா முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து 293 எம்.பி.க்களும் ஒரு மனதாக மோடியை மீண்டும் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
Read more ; ஜூன் 9 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி..!! 8000 பேருக்கு அழைப்பு..!