முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வயநாடு நிலச்சரிவு..!! ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி..!!

Nayanthara, Vignesh Shivan donate Rs 20 lakh to Wayanad landslide victims
05:00 PM Aug 02, 2024 IST | Mari Thangam
Advertisement

கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

Advertisement

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு கேரளாவுக்கு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.

அதே போல் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் முதல் தினமே நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய மூவரும் கேரளா நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இப்பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக, நடிகர் பகத்ஃபாசில் மற்றும் அவரது மனைவி நடிகை நஸ்ரியா நசிம் இருவரும் ரூ.25 லட்சம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

இது குறித்து வெளியான தகவலின்படி, ” வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்ன ஆகும் என்ற எண்ணத்திற்கு எங்கள்  இதயம் செல்கிறது. சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் வேதனையட வைத்தது.  மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.

ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம்  வழங்குகிறோம். நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த பதிலைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் கட்டியெழுப்பவும் குணமடையவும் வலிமையிலும் இரக்கத்திலும் ஒன்றுபடுவோம்” என கூறப்பட்டுள்ளது

Tags :
nayantharaVignesh shivanWayanad Landslide
Advertisement
Next Article