நெட்ஃப்லிக்ஸிலிருந்து நீக்கப்பட்ட நயன்தாரா படம்.! பகிரங்க மன்னிப்பு கோரிய தயாரிப்பு நிறுவனம்.!
நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது. நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படம் ஆக அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடிகர் ஜெய் சத்யராஜ் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஒரு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்தத் திரைப்படம் வெளியான நாளிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கியது. இந்தத் திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும்படியான வசனங்கள் இடம் பெற்றதாக சமூக வலைதளங்களிலும் மக்களிடமும் கடும் சர்ச்சை எழுந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் அர்ச்சகரின் மகளை இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்துவது போலவும் இஸ்லாமிய மத முறைப்படி நமாஸ் செய்ய வற்புறுத்துவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இது போன்ற காட்சிகள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு எதிராக சிவிசேனா கட்சியின் முன்னாள் தலைவர் மும்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு எழுந்த பலத்தை எதிர்ப்பைத் தொடர்ந்து திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கும் வரை அந்தத் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்திலிருந்து நீக்குவதாக திரைப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜீ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்து மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.