முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்டுகள்..!! சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்..!! என்கவுண்ட்டரில் 7 பேர் சுட்டுக்கொலை..!!

At least 7 Naxalites were killed in an encounter with security forces in Narayanpur district of Chhattisgarh today, a senior police officer said.
04:57 PM Dec 12, 2024 IST | Chella
Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் குறைந்தது 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

இதனால், அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினரை தவிர நாராயண்பூர், தண்டேவாடா, பஸ்தார் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் இருந்து மாவட்ட ரிசர்வ் காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More : ”அசால்ட்டா வந்து ஆட்டைய போட்டு போய்டாங்களே”..!! டிடிஎஃப் வாசன் கடையில் திருட்டு..!! சிசிடிவியில் சிக்கிய 2 இளைஞர்கள்..!!

Tags :
என்கவுண்ட்டர்சத்தீஸ்கர் மாநிலம்நக்சலைட்டுகள்பாதுகாப்புப் படையினர்
Advertisement
Next Article