For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நவராத்திரி 8ம் நாள்!. பூஜை நேரம், நைவேத்தியம், அலங்காரம் விவரம்!

Navratri is the 8th day! Pooja Time, Naivetiyam, Decoration Details!
06:19 AM Oct 10, 2024 IST | Kokila
நவராத்திரி 8ம் நாள்   பூஜை நேரம்  நைவேத்தியம்  அலங்காரம் விவரம்
Advertisement

Navratri 8th day: மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். ஒன்பது நாளும் ஒன்பது வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள்.

Advertisement

நவராத்திரியின் (Navaratri) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.

நவராத்திரியின் மிக முக்கியமான நிறைவு பகுதியை அடைந்துள்ளோம். நவராத்திரியின் எட்டாம் நாள் அதாவது அஷ்டமி திதி, துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். நவராத்திரியின் 8 ம் நாளில் அம்பிகையை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களும் நீங்குவதுடன், எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

நவராத்திரியின் எட்டாம் நாளே கன்னியா பூஜை செய்வதற்கு மிகவும் ஏற்ற நாளாக சொல்லப்படுகிறது. தூய்மை, கள்ளம் கபடம் இல்லாத மனம் ஆகியவை குழந்தைகளின் அடையாளமாகும். இதுவே தெய்வீக தன்மைக்குரிய குணமும் ஆகும். அதனால் தெய்வத்திற்கு சமமான 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து கன்னியா பூஜை நடத்தி, அவர்களின் மனம் மகிழும் படி பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நவராத்திரி பூஜை எட்டாவது நாள்: நரசிம்ம தாரினியை அலங்கரித்து வழிபட வேண்டும். பத்ம வகை கோலம் போட்டு வழிபட வேண்டும். ரோஜா பூ மற்றும் மருதாணி இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம்: பால் சாதம், பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். பாட வேண்டிய ராகம் புன்னாகவராளி.
பழங்கள்: திராட்சை பழத்தை படைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியின் எட்டாம் நாளில் துர்கையை வழிபடுவதால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகளை உடனடியாக நீங்கி, நலன்கள் கிடைக்கும். தீயசக்திகள் அழியும், வெற்றி கிடைக்கும், மனதில் இன்பம் ஏற்படும், இன்பமயமான வாழ்க்கை அமையும்.

Readmore: 1.7 கோடி சிம் கார்டுகள் முடக்கம்!. மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க நடவடிக்கை!

Tags :
Advertisement