இன்றுமுதல் தொடங்கும் நவராத்திரி விழா!. கொலு வைக்க உகந்த தேதி, நேரம் எப்போது?
Navratri: இந்தியாவில் நவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாப்படுகிறது. உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் ஒன்று சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்த நவராத்திரி. நவராத்திரியின் போது 9 நாட்கள் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. நவராத்திரியிலிருந்து சுப காரியங்களும் தொடங்குகின்றன. இந்து நாட்காட்டியின்படி, ஷரதிய நவராத்திரி இந்த ஆண்டு அக்டோபர் 3 முதல் தொடங்குகிறது.
இந்து புராணங்கள் படி, அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அவனை வதம் செய்ய மாபெரும் சக்தி தேவைப்பட்டது. இதற்கான காரணம், படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்துள்ளார்.
எனவே, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது, பராசக்தியை உருவாக்கினார்கள் என்று இந்து புராணங்கள் கூறுகிறது. 15 நாட்கள் நீண்ட போருக்குப் பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினர்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அம்மாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி விழா துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடக்கும். துர்க்கை அம்மனை ஒன்பது வடிவங்களான அவதாரத்தில் வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வீடு மற்றும் கோவில்களில் கொலு வைக்கபட்டு, ஒன்பது நாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
புரட்டாசி மாதத்தில் மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சாரதிய நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் சடங்குகளின்படி வழிபடப்படுகின்றன. இது வெறும் பண்டிகையாக மட்டுமின்றி பக்தி, நல்லிணக்கம், ஒற்றுமை, பகிர்ந்தளித்தல் போன்ற பண்புகளையும் பண்பின் அடையாள விழாவாகவும் கொண்டாடுகிறது. துர்கா தேவி தீமைகளை அழித்து, வாழ்வில் உள்ள இருளை போக்கி, ஒளியை தரக் கூடியவள். அவளின் அருளை பெறுவதற்குரிய காலமே நவராத்திரி ஆகும்.
நவதுர்க்க்கைகளையும் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அவரவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் செல்வ வளம், மகிழ்ச்சியான வாழ்க்கை, துன்பங்களில் இருந்த விடுதலை ஆகியன கிடைக்கும்.
அந்தவகையில், முதல் நாளான இன்று, கலசம் நிறுவப்படுகிறது. நம்பிக்கையின்படி, கலசம் நல்ல நேரத்தில் மட்டுமே நிறுவப்பட வேண்டும். ஏனென்றால் ஒன்பது நாட்களுக்கு அது ஒரு தெய்வமாக உங்கள் வீட்டில் இருக்கும்.
இன்றுமுதல் தொடங்கும் நவராத்திரி விழா, அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி அல்லது தசரா பண்டிகையுடன் முடிவடைகிறது. கொலு வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி கொலுவை அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ல் துவங்கி, அதிகபட்சமாக 11 வரை கொலு படிகள் அடுக்கலாம். முடிந்த வரை மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை அடுக்கி, கொலு வைப்பது சிறப்பு. தினமும் மாலை 6 மணிக்கு பிறகு நவராத்திரி பூஜையை செய்வது சிறப்பானதாகும்.
Readmore: இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?.