Navratri 6th Day!. மஹிஷா சூரனை கொன்ற கத்யாயனியை எப்படி வழிபடணும் தெரியுமா?
Navratri 6th Day: நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்க்கையின் பல்வேறு வடிவங்களை வழிபடுவது பாரம்பரியமாக உள்ள வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள் என்ற வரிசையில் முப்பெரும் தேவியர்களையும் நாம் வழிபடுவதுண்டு. முதல் மூன்று நாட்களும் மலைமகளான துர்கா தேவி அல்லது பார்வதி தேவியை வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் அலை மகளான செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்குரிய நாளாகும். மத்தியில் உள்ள மூன்று நாட்களும் முறையாக, பக்தியுடன் நாம் வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் மட்டுமன்றி அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும்.
இந்த மூன்று நாட்களில் முதல் நாளில் மகாலட்சுமி தேவியாகவும், அடுத்த நாள் மோகினி அல்லது வைஷ்ணவி தேவியாகவும் அலைமகளை வழிபட்டோம். மகாலட்சுமி வழிபாட்டிற்குரிய இறுதி நாளாகிய நவராத்திரியின் 6 ம் நாளில் எந்த அலங்காரத்தில், என்ன நிறத்தில், என்ன நைவேத்தியம், பழங்கள், மலர்கள் படைத்து அம்பிகையை வழிபட வேண்டும். என்ன மந்திரத்தை சொல்லி வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்? நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாட்டில் 6 ம் நாள் தேவிக்கு என்ன திருநாமம் என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரியின் 6 ம் நாளில் நவதுர்க்கைகளில் காத்யாயனி தேவியை வழிபட வேண்டும். வாள், தாமரை, சக்கரம், சங்கு என ஏந்தி நான்கு திருக்கரங்களுடன், சிங்கத்தின் மீது பவனி வரும் இந்த தேவிபலம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக விளங்கக் கூடியவள். இந்த தேவியை வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். இந்த நாளில் காத்யாயனி தேவியை வழிபடுபவர்கள் அனைத்து விதமான தடைகளில் இருந்தும் வெளி வருவார்கள். இந்த நாளில் பக்தர்கள் பலர் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
நவராத்திரியின் 6 ம் நாளில் அம்பிகையை சண்டிகா தேவி ரூபத்தில் வழிபடுபவர்களுக்கு வழக்குகளில் வெற்றி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். நோய்கள், துயரங்கள் நீங்கும். வெளிநாடு தொடர்பான வேலைகள் கைகூடி வரும். ஜென்மாந்திர பாவங்கள் நீங்கும்.
Readmore: பணத்தை பூஜை அறையில் வைக்கலாமா..? மணி பர்ஸில் இதை வைக்க மறந்துறாதீங்க..!!