தள்ளிப்போகும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா..!
சந்திரபாபு நாயடு ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை தள்ளிவைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயடு ஜூன் 9ல் பதவியேற்கவிருந்த நிலையில், ஜூன் 8ஆம் தேதி மோடி பிரதமராக 3ஆவது முறை பதவியேற்கவுள்ளதால், ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவை தள்ளி வைத்துள்ளார் சந்திரபாபு நாயடு.
இதனையடுத்து ஆந்திரா மாநிலம் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12ல் பதவியேற்கவுள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதேபோல் மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கே மக்கள் வாகை சூடியுள்ளனர். 25 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16, கூட்டணியில் உள்ள ஜனசேனா 2 மற்றும் பாஜக 3 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகளில் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 4 எம்பி தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெற்றுள்ளது.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளிலும், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் பாஜகவிற்கு 240 தொகுதிகளே கிடைத்துள்ளது. இதன் காரணமாக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவோடு 3ஆவது முறையாக ஜூன் 8ஆம் தேதி மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். மோடி பிரதமராக 3ஆவது முறை பதவியேற்கவுள்ளதால், ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவை தள்ளி வைத்துள்ளார் சந்திரபாபு நாயடு.
Read More: நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு தயவில் ஆட்சி!! ஜூன் 8ல் பதவியேற்கும் பிரதமர் மோடி!!