ரசாயனம் நிறைந்த கொசு விரட்டியால் ஏற்படும் ஆபத்து!! இனி கொசுக்களை விரட்ட, வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதும்..
தற்போது எல்லாம் வீடுகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பலர் சந்தைகளில் விற்கப்படும் ரசாயனம் நிறைந்த செயற்கையான கொசு விரட்டிகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் நன்மைகளை விட, தீமைகள் அதிகம். இது போன்ற செயற்கை கொசு விரட்டிகளால் பணம் அதிகமாக செலவாவது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் குழந்தைகள், பெரியவர்கள் என பலருக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இதனால் இது போன்ற ரசாயனம் நிறைந்த செயற்கை கொசு விரட்டிகள் பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள்..
அப்போ, கொசுக்களை விரட்ட என்ன தான் செய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த வகையில், இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து பாடாய் படுத்தும் கொசுக்களை எப்படி விரட்டலாம் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இதற்க்கு முதலில், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் காபி போடி இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பசை பதத்திற்கு கலந்து விடுங்கள். இப்போது இந்த கலவையை, பிரியாணி இலையின் இரண்டு பகுதியிலும் தேய்த்து காய வைத்து விடுங்கள். அவ்வளவு தான், இயற்கையான கொசு விரட்டி தயார்..
கொசுக்கள் அதிகம் இருக்கும் மாலை நேரத்தில், இந்த இலையை பற்ற வைத்து விடுங்கள். அதில் இருந்து வெளியாகும் புகையை வீடு முழுவதும் பரவும் போது, அந்த புகையின் வாசத்திற்கு கொசுக்கள் வராது. இது போன்ற இயற்கையான முறையில் தயாரிக்கும் கொசு விரட்டியில் இரசாயனங்கள் இல்லாததால், சுவாச பிரச்சனைகள் ஏற்படாது.