இந்த எண்ணெய் தேய்த்து பாருங்க.. கட்டாயம் இனி உங்களுக்கு ஹேர் டையே தேவைப்படாது..
முடி கொட்டுதல் பெரும்பாலும் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. மேலும் நரைமுடி அனைவரும் சந்திக்கும் பிரச்னை. இவற்றிற்கு சரியான தீர்வு கருவேப்பில்லையில் உள்ளது. ஆம், கருவேப்பிலை என்றாலே முடி ஆரோக்கியம் தான் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு கருவேப்பிலை முடி ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதனால் இயற்கையிலேயே முடியை வளர வைக்க மற்றும் நரை முடியை கருப்பாக மாற்றும் கருவேப்பிலை எண்ணெய் வீட்டிலேயே எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருவேப்பிலை - 1 கைப்பிடி
தேங்காய் எண்ணெய் - 1/2 லி
வெந்தையம் - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை :
முதலில் கருவேப்பிலையை கழுவி ஒரு துணியில் கட்டி நன்கு உலர்த்தி எடுத்து கொள்ள வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு பொடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணையை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிட வேண்டும். அதோடு இந்த கருவேப்பிலை பொடி மற்றும் 1 ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து எண்ணெய் நிறம் மாறி வரும் வரை சிறிது நேரம் கொதிக்கவிட்டு பின்பு அடுப்பை அணைக்க வேண்டும்.
இதனை ஆற வைத்து ஒரு துணியில் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இந்நிலையில், இந்த எண்ணெயை தொடர்ந்து முடியில் தேய்த்து வந்தால் நரை முடி இயற்கையாக கருமையாகும். மேலும் முடி வளர்தலும் அதிகரிக்கும்.
Read more: உங்க குழந்தைக்கு பசியே இல்லையா? அப்போ வாரம் ஒரு முறை இந்த கீரையை குடுங்க..