'வரலாறு காணாத இயற்கைப் பேரழிவு'!. 3000 ஏக்கர் பரப்பளவில் பயங்கர காட்டுத்தீ!. 5 பேர் பலி!. ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்!.
Forest fire: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ செவ்வாய்க்கிழமை (07) மாலையில் இருந்து தீவிரமாகப் பரவி வருகின்றது. பலத்த காற்று தெற்கு கலிபோர்னியாவில் பாரிய தீயை தூண்டியதுடன், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் இருந்து குறைந்தது ஒரு லட்சம் பேரை வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து. அதாவது, பசிபிக் பாலிசேட்ஸில் ஏற்பட்ட தீ 10 ஏக்கரில் இருந்து 2,900 ஏக்கருக்கு மேல் ஒரு மணி நேரத்தில் பரவியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையானது, பணியில்லாத தீயணைப்பு வீரர்களிடமிருந்து கூடுதல் உதவிக்கான வேண்டுகோளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் குறைந்தது 2 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலத்த காற்று மற்றும் மின் தடை காரணமாக சில பள்ளிகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளன. அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவாக கூட்டாட்சி பணத்தை பயன்படுத்த ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.