நாடுமுழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!. இப்படி வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், பண கஷ்டம் நீங்கும்!.
Krishna Jayanti: இந்தியா முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது இந்து சமூகத்தில் மிகவும் புனிதமான மற்றும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது. மேலும் இது கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில் பக்தர்கள் ஒரு நாள் விரதம் அனுசரித்து, இந்த திருவிழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
இந்து மதத்தின் நம்பிக்கைகளின்படி, கிருஷ்ணர் இந்த நாளில் பிறந்தார் என நம்பப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்தார். கிருஷ்ணரின் பிறந்தநாளான இந்த நாளில், மதுரா பிருந்தாவனத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும். மகாவிஷ்ணுவின் 9-வது அவதாரமாகும் கிருஷ்ணர், அவதரித்த நாளாக கிருஷ்ண ஜெயந்தியை நாம் கொண்டாடுகிறோம்.
இந்த நாளில் கிருஷ்ணருக்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் உட்பட பல நன்மைகளைப் பெறலாம் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில் நீங்கள் எந்த பொருட்களை கிருஷ்ணருக்கு படைத்தால், அவர் அருள் பொழியும் என்பதை இங்கு பார்க்கலாம். கிருஷ்ணரின் பொற்பாதங்களுக்கு மலர்களை அர்ப்பணிப்பது மிகுந்த ஆசியை தரும். மலர்களை 3 அல்லது அதன் மடங்கு எண்ணிக்கையில் அர்ப்பணம் செய்ய வேண்டும். பூக்களின் காம்புகள் பகவானை நோக்க வேண்டும். தாழம்பூ, சந்தனம், மல்லிகை போன்ற நறுமணம் உடைய ஊதுபத்திகளை பயன்படுத்துவது சிறந்தது.
கிருஷ்ணரின் முக்கிய அடையாளமான மயிலிறகை பூஜையில் வைத்து வழிபட்டால், அவரது பூரண அருள் கிடைக்கும். மயிலிறகு, தெய்வீக சக்தியை ஈர்த்துக்கொள்வதில் சிறந்தது. பகவத் கீதையில் கிருஷ்ணர், "துளசி இலை, 1 புஷ்பம், ஒரு உத்தரணி தீர்த்தம்" என்ற மூன்று பொருட்களை படைத்தால் திருப்தியாவேன் என்கிறார். துளசியை அர்ப்பணிப்பதால் பொருளாதார சிக்கல்கள் நீங்கி செல்வம் வளரும்.
கிருஷ்ணரின் பிரியமான உணவான அவலை புதியதாக வாங்கி அவல் பாயசம் செய்து படைத்து, பின்னர் அருகிலுள்ள குழந்தைகளுக்கு வழங்கினால், மேலும் புண்ணியம் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி நாளில், உணவில்லாதவர்களுக்கு அன்னதானம் செய்தால், கிருஷ்ணரின் இரக்கம் மற்றும் பூரண அருளை பெற்றிடலாம்.