முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கெஜ்ரிவால் கைது எதிரொலி : ஆம் ஆத்மி கட்சியினர் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

03:27 PM Apr 07, 2024 IST | Mari Thangam
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

Advertisement

 டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், அவருக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பதவியில் இருக்கும் முதலமைச்சர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்றும், சிறையில் இருந்த படியே பணிகளை செய்வேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது.

Tags :
aap partyaravindhkejrivalbhagawant maan
Advertisement
Next Article