சைனிக் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு...! முழு விவரம்
இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளம் வழியாக டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
இன்றைய இளைஞர்களை நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்பட தனியார் துறைக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட 23 அங்கீகரிக்கப்பட்ட புதிய சைனிக் பள்ளிகளின் மாநில மற்றும் யூனியன் பிரதேச வாரியான பட்டியலை https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். இந்த புதிய சைனிக் பள்ளிகள், அந்தந்த கல்வி வாரியங்களுடன் இணைக்கப்படுவதைத் தவிர, சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் செயல்படும்.