For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

NASA எச்சரிக்கை!… இணையமே இருக்காது!… 2025ல் பூமியை தாக்கும் பேராபத்து!

06:00 AM Mar 12, 2024 IST | 1newsnationuser3
nasa எச்சரிக்கை … இணையமே இருக்காது … 2025ல் பூமியை தாக்கும் பேராபத்து
Advertisement

NASA: எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பூமியை மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கவுள்ளதாகவும், இதனால், இணையமே இல்லாத நிலை கூட உருவகலாம் என நாசா எச்சரித்துள்ளது.

Advertisement

சூரியப் புயல் விரைவில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், சூரிய சிகரம் ஒரு மூலையில் உள்ளது என்பது தெளிவாவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வானில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனில் அவ்வப்போது, வெடிப்பு ஏற்பட்டு சூரியப் புயலாக (Solar Storm) வெளிப்படும். சூரியனின் இந்த செயல்பாட்டை புரிந்து கொள்வது முக்கியமானது. ஏனென்றால், இவை பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

புவியின் சுற்றுப் பாதையில் உள்ள செயற்கை கோள்கள், ஜிபிஎஸ் சிக்னல்கள், தொலை தூர ரேடியோ தகவல் தொடர்பு மற்றும் மின் தொகுப்புகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், தற்போது விண்வெளி ஏஜென்சியின் பார்க்கர் சோலார் ப்ரோப் இதனைப் பற்றி ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் "இணைய பேரழிவு" பற்றி அவர்கள் விவரித்துள்ளதுடன், சூரிய புயலின் போது, ​​சூரியனில் இருந்து வரும் காந்தப்புலங்கள் பூமியின் வளிமண்டலத்தில் பாரிய மின்னோட்டத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் எனப்படும் இந்த வெடிப்புகள் மணிக்கு 11,000,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்கு வரும். இவை வாரத்திற்கு 20 முறை பூமியை நோக்கி வருகிறது. இவை 2025 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது. இந்த சூரிய புயல் இப்போது தாக்கப்பட்டால், செயற்கைக்கோள்களில் எலக்ட்ரானிக்ஸ் கடுமையாக சேதமடையலாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். அத்துடன், இந்த சூரிய புயலால் நீண்ட தூர இணைப்புக்கு முக்கியமான நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பு கேபிள்கள் கூட பாதிக்கப்படலாம்.

துருவங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள், இணைய உள்கட்டமைப்பின் பெரும்பகுதி ஆகியவைகள் இந்த நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. இன்றைக்கு உலகத்தில் எல்லாமே செயற்கைக்கோள் பயன்பாடு வழியாக தான் செயல்படுகிறது. இந்த சூழலில் செயற்கைக்கோள் பாதிப்பு அடைந்தால் அது சார்ந்த பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ளும் நிலை வரும். இணையமே இல்லாத நிலை கூட உருவகலாம்” என எச்சரித்துள்ளனர்.

Readmore:  அடேங்கப்பா..!! 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு..!! மிரள வைக்கும் கண்டுபிடிப்பு..!!

Tags :
Advertisement