பெரிய ஆபத்து? மணிக்கு 38,453 கிமீ வேகம்.. பூமியை நெருங்கும் விண்கல்..!! நாசா எச்சரிக்கை
பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும். 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த விண்கற்கள் பூமிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பூமிக்கு நெருக்கமாக 45 அடி அகலமுள்ள விண்கல் ஒன்று பறந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2024 QL எனும் பெயரிடப்பட்ட இந்த விண்கல், பூமிக்கு நெருக்கமாக 11 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது. 45 அடி அகலம் கொண்ட இந்த விண்கலன் சுமார் 38,453 கி.மீ வேகத்தில் பூமியை கடக்கிறது. இந்த பாதையில் சிறிய மாற்றம் நிகழ்ந்தால் கூட அது பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி மோதினால், ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதைவிட 80 மடங்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும்.
இந்த விண்கல் விழுந்த இடத்தில் ஏறத்தாழ 2 கி.மீ சுற்றளவுக்கு, 1 கி.மீ ஆழத்திற்கு பள்ளம் உருவாகும். இப்படி விண்கல் விழும்போது ஏற்படும் அதிர்வலைகள், சூப்பர் சோனிக் வேகத்தில் பயணிக்கும். அதேபோல கல் விழுந்த இடத்தை சுற்றி 160 கி.மீ தூரத்திற்கு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இதே கல் கடலில் விழுந்தால் மிகப்பெரிய அளவுக்கு சுனாமி உருவாகும். இந்த விண்கல் பூமியின் வளிமண்டலத்தை கண்டு வரும்போது ஏராளமான தூசி துகள்களை வெளியேற்றும். இது சூரினை மறைத்து செயற்கையான குளிர் காலத்தை உருவாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Read more ; பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன்..!! போக்சோ-விற்கு பயந்து விபரீத முடிவு..!!