"தக்காளிய காணோங்க "! விண்வெளியில் காணாமல் போன தக்காளி.! 8 மாதங்களுக்கு பின் மீட்பு.!
நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி எட்டு மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் விண்ணணி வீரர்களிடமும் ஆராய்ச்சி நிலையத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நாசா ஆராய்ச்சி நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெஜ்-05 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் படி முட்டைகோஸ் தக்காளி ஒன்ற காய்கறிகள் விண்வெளியில் பயிரிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இவை அறுவடை செய்யப்பட்டது. எனினும் இவற்றில் பூஞ்சை தாக்குதல் இருக்கலாம் என்பதால் விண்வெளி வீரர்கள் இவற்றை சாப்பிடுவதில் கவனமாக இருந்தனர்.
அறுவடை செய்யப்பட்ட தக்காளிகளில் ஒரு தக்காளி திடீரென மாயமானது. இது தொடர்பாக அவர்கள் விண்வெளி நிலையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிராங்க் ரூபியோ என்ற விண்வெளி வீரர் தான் அதை சாப்பிட்டதாக வின்வெளி வீரர்கள் வேடிக்கையாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன தக்காளி தற்போது கிடைத்திருக்கிறது.
அந்த விண்வெளி நிலையத்தின் ஒரு ஓரத்தில் மறைந்திருந்த தக்காளியை விண்வெளி வீரர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதனை நாசாவின் தலைமையகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றனர். இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து நாசா அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.