முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜய் மகன் படத்தில் நானா ?.. 'ஆமா மீட்டிங் நடந்தது உண்மைதான்' - கவின் கொடுத்த ட்விஸ்ட்!

01:02 PM May 03, 2024 IST | Mari Thangam
Advertisement

நடிகர் விஜய்யின் மகள் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் நடிக்க இருப்பதாக வெளியாக தகவல் குறித்து நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

லண்டனில் சினிமா தொடர்பான படிப்பை நிறைவு செய்துள்ள ஜேசன் சஞ்சய் தற்போது தனது முதல் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நாயகனாக கவின் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கவின், " “ அந்தப்படம் தொடர்பான சந்திப்பு நடந்தது உண்மைதான். அந்த சந்திப்பு நட்பு ரீதியாக, மிகவும் சாதரணமாக நடந்தது. அவர்களிடம் நான் எனக்கு இருக்கும் அடுத்தடுத்த வேலைகள் குறித்து சொன்னேன். அவர்கள் கலந்து யோசித்து விட்டு சொல்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் வரவில்லை.

சஞ்சயை பொருத்தவரை, அவர் விஜய் சாரை விட சாதரணமாக இருப்பவர். எனக்கு அவரை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. அவர்களை பார்க்கும் போது, அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே.. என்று தோன்றும். நாம், இன்னும் இன்னும் பணிவாக வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.” என்று பேசினார்.

இதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின், ஹரீஷ் கல்யாண், அதர்வா முரளி ஆகியோரின் பெயர் அடிபட்டது. சிறிது காலம் கழித்து இவர்கள் மூவரும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இப்போது அந்தப்படத்தில் நடிகர் கவின் கமிட் ஆகவில்லை என்பது தெரிந்து விட்டது.

Tags :
actor vijay son jason sanjaykavin
Advertisement
Next Article