முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னைதான் எப்போதும் ’SAFE’!… பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான இந்திய நகரம்!… ஆய்வில் தகவல்!

08:24 AM Jan 07, 2024 IST | 1newsnationuser3
Advertisement

பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான இந்திய நகரங்களின் பட்டியலில் சென்னையும், மேலும் சிறிய நகரங்களின் வரிசையில் திருச்சியும் இடம்பெற்றுள்ளன.

Advertisement

மக்கள்தொகை அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று இந்திய நகரங்கள் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தின. இந்தியாவில் மொத்தமுள்ள 113 நகரங்களில் பணிபுரியும் பெண்களின் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பட்டியலில் 49 நகரங்கள் உள்ளன. அதேபோல் 10 லட்சத்திறக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 64 நகரங்கள் உள்ளன. மேற்கண்ட இரு பிரிவுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் நகரங்களின் வசிக்கும் பெண்களில், தங்களது வேலைவாய்ப்பிற்கு மிகவும் உகந்த சூழலை கொண்ட நகரங்களின் விபரங்களை தெரிவித்துள்ளனர்.

அதன்படி பணிபுரியும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை முதலிடத்தை பெற்றது. அதற்கு அடுத்ததாக பெங்களூரு, புனே, மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்கள் உள்ளன. இரண்டாவது பிரிவான 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிக்கும் பெண்களில், மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் திருச்சியை முதலாகவும், வேலூர், கொச்சி, திருவனந்தபுரம், சிம்லா போன்றவை அடுத்தடுத்த நகரங்களாகவும் உள்ளன. நகர்புறங்களில் வசிக்கும் பெண்கள் அணியும் ஆடை குறித்து இன்னும் மதிப்பிடப்படுவதாவும், அவற்றை சிலர் உற்று நோக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பான சிறிய நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் எட்டு இடங்கள் தென்மாநில நகரங்கள் பெற்றுள்ளன. சென்னையைத் தவிர, பெரிய நகரங்களின் டாப் 10 பட்டியலில் கோவையும் இடம் பிடித்துள்ளது. மேற்கண்ட இரண்டு பிரிவுகளிலும் தமிழகத்தின் 7 நகரங்கள் பெண்களுக்கான பாதுகாப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளன. கணக்கெடுப்புக்கு பதிலளித்த 32% பெண்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் இரவு 8 மணிக்குப் பிறகு வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என்று கூறியுள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
ChennaiSafest city in IndiaTrichyworking womenஆய்வில் தகவல்சென்னைதிருச்சி முதலிடம்பணிபுரியும் பெண்கள்பாதுகாப்பான இந்திய நகரம்
Advertisement
Next Article