முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு..!! சீமான் அறிவிப்பு..!!

Coordinator Seeman has announced that Naam Tamilar Party will fully support the ongoing hunger strike led by AIADMK General Secretary Edappadi Palaniswami.
04:02 PM Jun 27, 2024 IST | Chella
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தருவதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டு வரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்தது..? நிலவரம் இதோ..!!

Tags :
அதிமுகஎடப்பாடி பழனிசாமிசீமான்
Advertisement
Next Article