For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”பள்ளி பாடப்புத்தகத்தில் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு”..!! விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்..!!

With the aim of making school students aware of the life history of Nallakannu Ayya, a decision will be taken to include his biography in the textbook after consulting the Chief Minister.
02:29 PM Dec 30, 2024 IST | Chella
”பள்ளி பாடப்புத்தகத்தில் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு”     விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்
Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர் கலந்து கொண்டனர். இதில், நல்லகண்ணு குறித்த 'நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.

Advertisement

நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதியும் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய அவர், ”விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும். காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுக் கொடுத்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன். இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன்” என்று பேசினார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய திரு.நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : ”பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”..!! ஆளுநரை சந்தித்து விஜய் மனு..!! அறிக்கை வெளியிட்ட தவெக..!!

Tags :
Advertisement