முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீடியோ காலில் நிர்வாண மோசடி!… தெரியாத எண்களை சைலண்ட் மோடில் வைப்பது எப்படி?… பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்!

07:12 AM Nov 04, 2023 IST | 1newsnationuser3
Advertisement

இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் பயன்பாடுகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்றாகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரும் இந்த மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப் பயன்பாட்டில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற அடிக்கடி புதிய தந்திரங்களைக் கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், கடந்த சில மாதங்களாக வீடியோ அழைப்பு தந்திரத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisement

அதாவது, திரையின் மறுபுறம் நிர்வாணமாக இருக்கும் அடையாளம் தெரியாத பெண் உங்களை அழைக்கலாம். நீங்கள் அழைப்பைத் துண்டிக்க்கும் வரை, வீடியோ பதிவு செய்யப்படும். இந்த வீடியோ உங்களுக்கு வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது முகநூலிலோ காவல்துறை அலுவலரின் பெயரிலோ திரும்ப அனுப்பப்படுகிறது. மோசடி செய்பவர்கள் இதுபோன்று உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பல புகார்கள் ஆங்காங்கே காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேலுக்கு வாட்ஸ்அப்பில் "செக்ஸ்டோர்ஷன் கால்கள்" செய்ததாகவும் இருப்பினும், அமைச்சர் விரைவாக அழைப்பை முடித்துக்கொண்டு சம்பவம் குறித்து போலிசாருக்கு அறிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த இருவரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இதுபோன்ற வீடியோ அழைப்புகளின் காரணமாக இந்தியாவிலும் உலக அளவிலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வாட்ஸ்அப் செக்ஸ்டோர்ஷன் வீடியோ கால் மோசடிகளில் இருந்து உங்களை எப்படி காப்பாற்றுவது?

தெரியாத ரேண்டம் எண்களிலிருந்து வரும் அழைப்பை தானாகவே அமைதிப்படுத்தும் (சைலண்ட் மோடில்) வைக்கும் வகையில் புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ் அப் செட்டிங்ஸில் எளிமையாக ஆன் செய்து வைத்துக்கொள்ள முடியும். வாட்ஸ் அப் வலது மேல் பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனு ஆப்ஷனை தேர்வு செய்யவும், பிறகு வாட்ஸ் அப் செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதில் பிரைவசி என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும், ஸ்க்ரோல் டவுன் செய்து கால் என்பதை தேர்வு செய்யவும், அடுத்து திரையில் தோன்றும் Enable Silence unknown callers என்ற ஆப்ஷனை ஆன் செய்து வைத்துக்கொள்ளவும். இனி தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் யாவுமே தானாக சைலண்ட் மோடிற்கு சென்றுவிடும். இருப்பினும், தெரியாத எண்கள் சைலண்ட் மோடில் சென்றாலுமே, அழைப்பு வந்ததற்கான நோட்டிபிக்கேஷன் பார்க்க முடியும். மேலும் கால் ஹிஸ்ட்ரியிலும் இதனை பார்க்கலாம்.

Tags :
சைலண்ட் மோடில் வைப்பது எப்படி?தெரியாத எண்கள்வீடியோ காலில் நிர்வாண மோசடி
Advertisement
Next Article