நாம் தமிழரின் விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கீடு..!! தமிழ்நாட்டில் இப்படியொரு கட்சி இருக்கா..?
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன. மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளை பெற்று 3-வது பெரிய கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை 50 லட்சம் வாக்குகள் பெறும் என கணிக்கப்படுகிறது. இதனால், அக்கட்சியின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், தேர்தலில் போட்டியிடாத Bharatiya Praja Aikyata Party-க்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியினர் குமுறுக்ன்றனர். அதுவும் தமிழ்நாட்டிலும் இக்கட்சி இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.