பெரியார் என்ன சமூக நீதி செய்யார்? விவாதத்திற்கு நான் தயார்..!! சவால் விட்ட சீமான்
அண்மையில் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதுகுறித்து சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பெரியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. பெரியாரை ஆதரித்து பேசும் இத்தனை தலைவர்களில், யாராவது ஒருவர் பொதுத்தேர்தலில் பெரியாரின் சித்தாந்தங்கள், தத்துவங்களை பேசி வாக்கு சேகரிக்க ஒருவர் தயாராக இருக்கிறீர்களா? தடை செய்யப்பட்ட இயக்கம், பயங்கரவாதி என்று சொல்லும் என் தலைவனின் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறேன்.
“பெரியார் தத்துவங்களை மட்டும் பேசி வாக்கு சேகரிக்க எந்த தலைவராவது தயாரா? பெரியார் குறித்து பொது விவாதத்துக்கு தயார். பொதுவிவாதத்துக்கு இருகரம் நீட்டி தயாராக உள்ளேன். பெரியார் என்ன சமூக நீதி செய்யார்? பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி உள்ளது. வள்ளுவர், பாரதியார் ஆகியோர் பெண்ணுரிமைக்காக பேசியுள்ளனர். திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என பேசுகிறார்கள். ஆரியத்தோடு கைகோர்த்துக்கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும் அண்ணாவும் கூறினர்.
சமூக நீதி என்பது என்ன? அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிப்பது. கலைஞர் காலத்தில் அவரது வீட்டிலேயே இரண்டு அமைச்சர்கள், தற்போதும் அதே நிலைதான் தொடர்கிறது. இதுதான் சமூக நீதியா? வீட்டிற்குள் இருக்கும் சனாதனத்தை ஒழிக்காமல் வெளியே இருக்கும் சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Read more ; இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடும் சரிவு.. என்ன காரணம்..?