For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியுடன் இணைகிறதா நாம் தமிழர்..? சீமான் பரபரப்பு பதில்..!!

01:43 PM Nov 06, 2023 IST | 1newsnationuser6
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியுடன் இணைகிறதா நாம் தமிழர்    சீமான் பரபரப்பு பதில்
Advertisement

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் திட்டமிட்டே சோதனை நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சோதனைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்கட்சிகளை அச்சுறுத்துகின்றனர்.

Advertisement

சனாதனம் என்றால் என்ன என்கின்ற வரையறையை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இங்கு ஆதிக்க சாதி என்றும் ஒருவருமில்லை, அடிமை சாதி என்றும் ஒருவருமில்லை. நான் உயர்ந்த சாதி என எண்ணுபவர்கள், நமக்கு கீழே தாழ்ந்த சாதி யாருமில்லை என நினைத்தால் பிரச்சனை வராது.

நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார். அவர் படம் நடிப்பதை நிறுத்திவிட்டு கட்சி தொடங்குவார். அரசியலுக்கு வந்த பிறகு அவருடன் கூட்டணி குறித்து பேசி முடிவு சொல்லலாம். தற்போது நான் தனித்து போட்டியிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement