முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"Myth vs Reality Register" தேர்தல் தொடர்பான போலி தகவல்...! புதிய இணையதளம் தொடக்கம்..‌!

09:16 AM Apr 03, 2024 IST | Vignesh
Advertisement

தவறான தகவல்கள் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கும், தேர்தல் நடைமுறையின் நேர்மையை நிலைநிறுத்துவதற்கும், இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 பொதுத் தேர்தல்களின் ஒரு பகுதியாக ‘Myth vs Reality Register’ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://mythvsreality.eci.gov.in/) மூலம் ‘Myth vs Reality Register’ பொதுமக்கள் அணுகலாம்.

Advertisement

உலக அளவில் பல ஜனநாயக நாடுகளில் தவறான தகவல்கள் மற்றும் தவறான கற்பிதங்கள் அதிகரிக்கும் கவலையாக மாறி வருவதால், தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதுமையான மற்றும் செயலூக்கமான முயற்சி, தேர்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை வாக்காளர்கள் அணுகுவதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.

‘Myth vs Reality Register' தேர்தல் காலத்தில் பரவும் கட்டுக்கதைகள் மற்றும் பொய்களை அகற்றுவதற்கு உண்மைத் தகவல்களின் விரிவான களஞ்சியமாக செயல்படுகிறது. இதன் மூலம் தகவலறிந்த முடிவுகளை எடுக்க மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பயனர் நட்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம், வாக்காளர் பட்டியல் , தேர்தல்களை நடத்துதல் மற்றும் பிறவற்றைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கிறது.

ஏற்கனவே பரவியுள்ள தேர்தல் தொடர்பான போலி தகவல்கள், சமூக ஊடக தளங்களில் பரவும் சாத்தியமான கட்டுக்கதைகள், முக்கியமான தலைப்புகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் குறிப்பு பொருட்கள் ஆகியவற்றை இந்தப் பதிவேடு வழங்குகிறது. பதிவேடு தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படும்.

Advertisement
Next Article