For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Chennai | கவர்ச்சி நடிகையின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்..!! சோனாவுக்கு என்ன ஆச்சு..?

The incident in Maduravayal where some miscreants entered actress Sona's house with a knife and tried to rob has caused a shock.
01:55 PM Oct 04, 2024 IST | Chella
chennai   கவர்ச்சி நடிகையின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்     சோனாவுக்கு என்ன ஆச்சு
Advertisement

மதுரவாயலில் உள்ள நடிகை சோனா வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் கத்தியுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா. ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28 வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர் இருவர் அவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்து வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயன்றுள்ளனர்.

அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களை பார்த்து குரைத்துள்ளது. இதையடுத்து, சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்ததும் தப்பியோட முயன்றுள்ளனர். இதையடுத்து, சோனா கூச்சலிடவே மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் சோனா தப்பி தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, சோனா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகையின் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? 4 நாட்கள் சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement