For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பள்ளிகளில் பரவும் மர்ம காய்ச்சல்..!! கொரோனா போல் முன்பே எச்சரித்த நிறுவனம்..!!

08:00 AM Nov 23, 2023 IST | 1newsnationuser6
பள்ளிகளில் பரவும் மர்ம காய்ச்சல்     கொரோனா போல் முன்பே எச்சரித்த நிறுவனம்
Advertisement

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், சீனாவில் மர்மமான நிமோனியா காய்ச்சல் பள்ளிகளில் பரவுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலை, கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின் ஆரம்ப நாட்களை நினைவூட்டுவதாக கூறுகின்றனர். பெய்ஜிங் மற்றும் லியோனிங் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இதனால் மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பாடசாலைகளை மூடுவதே காய்ச்சல் பரவுவதை தடுக்க உரிய வழி என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் நுரையீரல் அழற்சி மற்றும் அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளனர். ஆனால், இருமல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லை என்றே கூறுகின்றனர்.

இதற்கிடையே, உலக அளவில் நோய் பரவல் உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் ProMed என்ற நிறுவனம், குறிப்பாக குழந்தைகளை பாதிக்கும், உறுதி செய்யப்படாத நிமோனியா தொற்றுநோய் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 2019 டிசம்பர் இறுதியில் கொரோனா தொற்று குறித்து இந்த ProMed நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது சீனாப் பள்ளிகளில் பரவும் காய்ச்சல் தொடர்பிலும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement