முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம காய்ச்சல்.. கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 

07:38 PM May 08, 2024 IST | Mari Thangam
Advertisement

டெல்லி, காசியாபாத் பகுதியில் மர்ம நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 நாட்களில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் காசிபாத் என்ற பகுதியில் கிட்டத்தட்ட 400 பேர் மர்ம தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது எந்த வகையான தொற்று எதனால் அடுத்தடுத்த மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை.

மேற்கொண்டு குறித்து சுகாதாரத்துறையும் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. இதற்கு என்ன காரணம் என்று சுகாதாரத்துறை விசாரணை செய்கையில் அங்கு உபயோகிக்கும் தண்ணீர் தான் என கண்டறியப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யஅங்குள்ள தண்ணீரை எடுத்து மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இவ்வாறு மக்கள் பாதிப்படைவது குறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டபொழுது, கழிவு நீர் தொட்டியானது கசிந்து தண்ணீரில் கலப்பதால் இவ்வாறான பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தற்பொழுது நடைபெற்று வரும் வெப்பசலானத்தாலும் இவ்வாறான தொற்றுகள் உருவாகலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு மாதிரி பரிசோதனை வரும் பொழுது தான் இந்த பாதிப்பு தொற்று எதிலிருந்து வந்தது என்பது குறித்து தெளிவான விளக்கம் தெரியகூடும். அங்குள்ள மக்களின் நலனுக்காக சுகாதாரத்துறை இந்த வாரம் அந்த பகுதியில் முகாமிட்டு அங்குள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி நிறைந்த மருந்து மாத்திரைகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags :
#Delhimysterious fever
Advertisement
Next Article