For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'என்னுடைய பிட்டு பட போஸ்டரை என் மகன் பார்த்துட்டு ஒரு கேள்வி கேட்டான்’..!! ஓப்பனாக கூறிய நடிகை அர்ச்சனா..!!

02:46 PM Dec 09, 2023 IST | 1newsnationuser6
 என்னுடைய பிட்டு பட போஸ்டரை என் மகன் பார்த்துட்டு ஒரு கேள்வி கேட்டான்’     ஓப்பனாக கூறிய நடிகை அர்ச்சனா
Advertisement

பிரபல நடிகை அர்ச்சனா சீரியல், சினிமா இரண்டிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் இவர், அசைவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இந்த திரைப்படத்தின் கதையின்படி கதாநாயகனின் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணாக அர்ச்சனா மாரியப்பன் நடித்திருப்பார். வசதி வாய்ப்புக்காக கதாநாயகனை அனுசரித்துச் செல்லும் வேலைக்கார பெண்ணாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் ஒரு பிட்டு படம் என்றுதான் கூற வேண்டும். காரணம், இந்த படத்தின் கதாநாயகன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆவார். ஆனால், மனைவியை விட்டுவிட்டு மனைவியின் அம்மா மற்றும் மனைவியின் தங்கை என இருவரையும் வேட்டையாடுவார்.

ஆரம்பத்தில் கதாநாயகனின் ஆசைக்கு இணங்க மறுக்கும் மாமியாரும், மச்சினிச்சியும் ஒரு கட்டத்தில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இது போதாது என்று வேலைக்கார பெண்ணாக இருக்கும் நடிகை அர்ச்சனாவையும் விட்டு வைக்க மாட்டார் படத்தின் கதாநாயகன். இந்த கூத்துகள் எல்லாம் மனைவிக்கு தெரிய வரும்போது மனைவி என்ன செய்கிறார்? பெற்ற மகளுக்கு சக்களத்தியான தாய் என்ன முடிவு எடுத்தார்? அவருடைய நிலை என்ன ஆனது? கதாநாயகன் நிலை என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை. இப்படி ஒரு மகா மட்டமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் அர்ச்சனா மனம் திறந்திருக்கிறார்.

அவர் கூறுகையில், என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி இந்த படத்தின் போஸ்டர்கள் பேப்பரில் வந்து கொண்டிருந்தது. உண்மையில் இந்த படத்தின் பெயர் மணமகன் தேவை என்பது தான். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை விளக்கி சொல்லும்போது ஒரு மாதிரி சொன்னார்கள். ஆனால், படம் எடுக்கும் போது வேறு மாதிரி எடுத்திருக்கிறார்கள். போஸ்டரில் பிரதானமாக என்னுடைய புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது.

இதனை என்னுடைய மகன் பார்த்துவிட்டு.. அம்மா இது நீதானே.. என்று என்னிடம் கேட்டான். எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அப்போதே இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நீங்கள் இந்த பிரச்சனையை பெரிது படுத்தினால்.. நீங்களே அவர்களுக்கு விளம்பரம் தேடி கொடுத்தது போல் ஆகிவிடும். இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அதனால் விட்டு விட்டேன்.

ஒப்பந்தம் செய்யும் பொழுது படத்தின் தலைப்பு மணமகன் தேவை என இருந்தது. ஆனால், படத்தை எடுத்து முடித்துவிட்டு அசைவம் என்று தலைப்பை மாற்றிவிட்டார்கள். அந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். குறிப்பாக என்னுடைய மகனே அந்த படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு வந்து என்னிடம் கேட்ட அந்த கேள்வியை என்னால் மறக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

Tags :
Advertisement