For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா: "வரலாற்றில் இடம் பெற்று விட்டேன்.." முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

12:27 PM Jan 24, 2024 IST | 1newsnationuser7
ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா   வரலாற்றில் இடம் பெற்று விட்டேன்    முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
Advertisement

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் பெற்றது. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த வாக்குறுதியின் அடிப்படையில் அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரையில் 66 ஏக்கர் நிலப்பரப்பில் 44 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரங்கம் அமைக்கப்பட்டது.

Advertisement

பல நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான நுழைவு வாயில் வாடிவாசல் மாடுகள் மற்றும் வீரர்கள் பதிவு செய்யும் இடம் வீரர்களுக்கான பரிசோதனை நிலையம் மருத்துவமனை காளைகள் கண்காட்சி உட்பட அனைத்து வசதிகளுடன் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டது .

இந்த விளையாட்டரங்கத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார். மேலும் இந்த மைதானத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த மைதானத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு 500 காளைகளும் 300 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஏறு தழுவுதல் விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதன் மூலம் வரலாற்று இடம் பெற்றதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக நமது நாட்டில் முதல் முதலாக ஒரு மைதானம் அமைக்கப்பட்டு இருக்கிறது. வீர விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்போம் என தெரிவித்தார். மேலும் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு ஜல்லிக்கட்டு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு எனவும் தெரிவித்தார்.

Tags :
Advertisement