For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”என்னுடைய அம்மா இறக்கவில்லை”..!! மாமியார் தான் இறந்துவிட்டார்..!! விளக்கம் கொடுத்த கமலா காமேஷின் மகள் உமா ரியாஸ்..!!

Uma Riaz has clarified that her mother did not die, but that her husband Riaz Khan's mother, Rashida Banu, died.
11:59 AM Jan 11, 2025 IST | Chella
”என்னுடைய அம்மா இறக்கவில்லை”     மாமியார் தான் இறந்துவிட்டார்     விளக்கம் கொடுத்த கமலா காமேஷின் மகள் உமா ரியாஸ்
Advertisement

பிரபல நடிகையான கமலா காமேஷ் உயிரிழந்ததாக வெளியான தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் 80-களில் மிகவும் பிரபலமான நடிகை கமலா காமேஷ். இவருக்கு வயது 72. கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை என சுமார் 480 படங்களில் நடித்துள்ளார். இதில், இயக்குனர் விசுவின் ”சம்சாரம் அது மின்சாரம்” படத்தில் கமலா காமேஷ் ஏற்று நடித்த, கோதாவரி எனும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

திரைப்படங்கள் மற்றும் மேடைநாடகங்கள் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ”வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தான், கமலா காமேஸ் உயிரிழந்ததாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக பேசிய அவரது மகள் உமா ரியாஸ், “தனது அம்மா இறக்கவில்லை என்று எனது கணவர் ரியாஸ் கானின் தாயார் ரஷீதா பானுதான் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்” என உமா ரியாஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், கமலா காமேஷ் இறக்கவில்லை என்பது, அவர் நலமுடன் இருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

Read More : திடீரென சட்டப்பேரவையில் கண்ணீர் விட்ட CM ஸ்டாலின்..!! என்னை அப்படி அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி..!!

Tags :
Advertisement