என் அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லை!… தாய் பாசத்திற்கு ஏங்கும் குழந்தை!… இதயத்தை உருக்கும் வைரல் வீடியோ!
கொரிய ரியாலிட்டி ஷோவான "மை கோல்டன் கிட்ஸ்" நிகழ்ச்சியில் 4 வயது குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கியூம் ஜி-யூன் என்ற 4 வயது சிறுவனிடம் ஒரு தொகுப்பாளர் "உன் பெற்றோரில் நீ யாரை அதிகம் விரும்புகிறாய்?" என்று கேட்டனர். அவனது பதில் அனைவரது மனதையும் கனக்கச் செய்தது. அதாவது, "எனக்குத் தெரியாது," என்று அச்சிறுவன் கூறினான். மேலும் "நான் எப்போதுமே வீட்டில் தனியாக தான் இருப்பேன், யாரும் என்னுடன் விளையாடுவதில்லை" என்று சோகமாகக் கூறினான்.
அந்த சிறுவனிடம் அப்பா பற்றி கேட்டபோது, "என் அப்பா கோபமாக இருக்கும்போது எனக்கு பயமாக இருக்கும்" என்று நடுங்கிய குரலில் அச்சிறுவன் கூறினான். தன் தந்தை தன்னிடம் அன்பாகவும், மென்மையாகவும் பேசும் என்று ஏக்கத்தோடு தன் பதிலை கூறினான். அம்மாவை பற்றி கேட்டபோது, "என் அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று அவன் சொல்லும்போது அவனது கண்ணில் கண்ணீர் வடிந்தது. "என் அம்மா என் உடன் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று தாயின் பாசத்திற்காக ஏங்கியபடியே பதில் சொன்னான். இதயத்தை உருக்கும் ஒன்றரை நிமிட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பல ஊடக பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.