For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”புருஷன் நான் இருக்கும்போது வேற ஒருத்தவன் கூட”..!! செருப்பால் அடித்த மனைவி..!! பதிலுக்கு கத்தியை எடுத்து சொருகிய கணவன்..!!

Krishnamurthy and Jyothi had a relationship. This eventually turned into a love affair, and the two often had fun together.
08:40 AM Jan 13, 2025 IST | Chella
”புருஷன் நான் இருக்கும்போது வேற ஒருத்தவன் கூட”     செருப்பால் அடித்த மனைவி     பதிலுக்கு கத்தியை எடுத்து சொருகிய கணவன்
Advertisement

சென்னை திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு வயது 42 ஆகிறது. இவரது மனைவி ஜோதி (27). இந்த தம்பதிக்கு ஜெகதீஷ், தனுஷ், ஹரிஷ் என 3 மகன்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவர் - மனைவி பிரிந்த நிலையில், 3 மகன்களுடன் ஜோதி தனியாக வசித்து வருகிறார். இவர்கள் மேடவாக்கம், புதுநகர் 4-வது குறுக்குத்தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், மேடவாக்கத்தில் செயல்பட்டு வரும் பியூட்டி பார்லரில் ஜோதி அழகுக்கலை நிபுணராக வேலை பார்த்து வந்த நிலையில், அதே பகுதியில் மணிகண்டனின் அக்கா துளசி என்பவரின் மருமகன் கிரிஷ் என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 38) வசித்து வருகிறார். இதனால், கிருஷ்ணமூர்த்திக்கு - ஜோதிக்கும் இடையே பழக்கமானது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் மணிகண்டனுக்கு தெரியவரவே, அவர் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால், இதற்கு ஜோதி மறுப்பு தெரிவிக்கவே, கிருஷ்ணமூர்த்தியுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மாலை ஜோதியை தொடர்புகொண்ட மணிகண்டன், சபரிமலை பிரசாதத்தை குழந்தைக்கு தர வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் பள்ளிக்கரணைக்கு வந்த ஜோதியிடம் மணிகண்டன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஜோதி, தனது கணவரை செருப்பால் அடித்துள்ளார். பின் புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர், மேடவாக்கம் பகுதிக்கு இரவு கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தியுடன் ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே, மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போது இதை தடுக்க வந்த கிருஷ்ணமூர்த்திக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ந்துபோன மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜோதி உயிரிழந்தார். கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பிடிபட்ட மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : 6 பேரை அரிவாளால் வெட்டிய கஞ்சா போதை கும்பல்..!! 3 பேர் கவலைக்கிடம்..!! திருவள்ளூரில் பயங்கர சம்பவம்..!!

Tags :
Advertisement