”என் அப்பா ஒன்னும் சங்கி கிடையாது”..!! ஐஸ்வர்யா வேதனை..!! கண்கலங்கிய ரஜினி..!!
ரஜினிகாந்த் சங்கி இல்லை என லால்சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அத்திரைப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நேற்று (26.01.2024) நடைபெற்ற இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மூத்த திரைப்பட இயக்குனர் ரவிக்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், ”இந்த இடத்தில் நான் நிறையா பேச ஆசைப்படுகிறேன். 3 படத்தில் asst. Dir ஆக இருந்தார் விஷ்ணு. இந்த கதையை 2, 3 பேருக்கு சொல்லிருக்கிறேன். தொலைப்பேசியில் அழைத்தால் எடுத்து பேசுகின்றனர். அப்பா பத்தி கேட்கிறாங்க. ஆனால், படத்துக்கு நடிக்க மாட்டேன் என்று கூறினார்கள். பலரும் மதம் சம்பந்தமாக இருக்கு என்று நிராகரித்தார்கள்.
இந்த படம் மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்னார். அப்பா கிட்ட கதைய காண்பித்தேன். அப்பாவே பண்றேன் என்று சொன்னார். 35 வருடங்களாக அப்பா சம்பாதித்த பெயரை உடைக்கக் கூடாது என்று நினைத்தேன். அதனால அப்பாவ எப்போதும் நடிக்க சொல்ல மாட்டேன். ஆனால், அப்பா இந்த கதை பிடித்து அவராக நானே நடிக்கிறேன் என்று கூறினார். VIP-க்கு எல்லாம் எளிதில் கிடைக்கும் என்று நினைக்கிறவர்கள். அப்படி நினைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள்.
புது முகங்களுக்கு கூட எளிதில் அனைத்தும் கிடைத்து விடும். ஆனால், எங்கள மாதிரி ஆளுங்களுக்கு கிடைக்கிறது தான் கடினம். படத்தோட ஷூட்டிங்கில் செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது. எல்லாருமே தன் வீட்டு குழந்தையை போல் பார்த்துக் கொண்டனர். அதனால் தான் எல்லா இயக்குனர்களும் வெளியிடங்களில் ரஜினியை வைத்து எளிதில் படம் எடுக்கின்றனர். ரஹ்மான் குழந்தை மாதிரி. எல்லா புது தொழில்நுட்பதையும் தெரிந்து வைத்திருப்பார். இரவில் தான் இசை அமைப்பார்.
என் குழந்தைகள் தான் எனக்கு கிடைத்த வரம். பெரியவன் ரொம்ப தத்துவம் பேசுவான் சின்னவர் ரொம்ப critic. பொண்ணு ஒரு கஷ்டம் என்றால் பணம் கொடுக்கலாம். ஆனால் அவர் எனக்கு படம் கொடுத்து உதவியுள்ளார். இந்த படத்த அவர் எனக்காக ஒத்துகொள்ளவில்லை. இந்த படம் சொல்ல வரும் கருத்துக்காக தான் ஒத்துக்கொண்டார். சங்கி வார்த்தை முதலில் எனக்கு தெரியாது. அதை பற்றி தெரிந்த பிறகு ரொம்ப வேதனை அளிக்கிறது. ஒரு இயக்குனராக இதை சொல்ல பெருமை படுகிறேன்.
ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் ஏன் லால் சலாம் படத்தில் நடிக்கனும். சங்கியாக இருந்தால் அவர் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கி இந்த படம் பண்ண முடியாது. அந்த தைரியம் ரஜினியை தவிர யாருக்கும் இல்லை. இந்த படத்தை அவ்வளவு தைரியமாக யாருமே பண்ணிருக்க மாட்டாங்க அவர தவிர. நீங்க எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் சங்கி இல்லை. Love Lumanity" என்றார்.