For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

என்னுடைய பிறந்தநாள் பரிசு!. எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சி!. டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து!

My birthday present! MS Dhoni is flexible! Congratulations to the Indian team who won the T20 World Cup!
08:20 AM Jun 30, 2024 IST | Kokila
என்னுடைய பிறந்தநாள் பரிசு   எம் எஸ் தோனி நெகிழ்ச்சி   டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து
Advertisement

Dhoni wishes: என்னுடைய பிறந்தநாள் பரிசாக டி20 உலக கோப்பையை வென்று தந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. அதுமட்டுமின்றி, சுமார் 11 ஆண்டுகளாக நீடித்து வந்த ஐசிசி கோப்பை தாகத்தை ஒருவழியாக இந்திய அணி இம்முறை தீர்த்தது. 2007ஆம் ஆண்டுக்கு பின் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா தற்போது கைப்பற்றியுள்ளது.

அதுமட்டுமின்றி கடைசியாக தோனியின் (MS Dhoni) தலைமையின்கீழ் 2013இல் இங்கிலாந்தை வீழ்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருந்தது. அதன்பின் பல ஐசிசி தொடரின் நாக்-அவுட் போட்டிகளில் படுதோல்வி அடைந்து பல வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறது. கடந்தாண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 என அடுத்தடுத்து இரண்டு வாய்ப்புகளை ஆஸ்திரேலியாவிடம் தவறவிட்டிருந்தது.

இந்நிலையில் பலரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு (India National Cricket Team) வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும், சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களும், பிரபலங்களும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு தங்களின் சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், யாருமே எதிர்பார்க்காத இந்திய அணியின் (Team India) முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இன்ஸ்டாகிராம் (MS Dhoni Instagram Post) மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பலருக்கும் அவரது வாழ்த்து பதிவு சர்ப்ரைஸாக இருந்த நிலையில், தனது பிறந்தநாளுக்கு சிறப்பான பரிசை அளித்ததற்கு நன்றி எனவும் தோனி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

தோனி அவரது இன்ஸ்டா பக்கத்தில்,"உலகக் கோப்பை சாம்பியன்கள் 2024. என் இதயத் துடிப்பு அதிகரித்துவிட்டது, அமைதியாக இருந்து, தன்னம்பிக்கையுடன், நீங்கள் இதற்கு முன் செய்ததையே இப்போது செய்து சிறப்பாக முடித்துள்ளீர்கள். உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு, இந்தியாவிலும் உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இந்தியர்கள் சார்பாக நன்றி… வாழ்த்துக்கள். ஹரே… விலைமதிப்பற்ற இந்த பிறந்தநாள் பரிசுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

Readmore: புதிய ராணுவ தளபதி!. லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இன்று பதவியேற்பு!

Tags :
Advertisement