முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரஸ்பர விவாகரத்து!. கட்டாய காத்திருப்பு அவசியமில்லை!. நீதிமன்றம் அதிரடி!

Mutual Divorce!. No forced waiting!. Court action!
07:01 AM Aug 07, 2024 IST | Kokila
Advertisement

Mutual Divorce: விவாகரத்து வழக்குகளில் 6 மாதம் காத்திருப்பு காலம் பின்பற்றுவதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப முடிவு செய்யவேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

புனேவை சேர்ந்த தம்பதி திருமணம் ஆகி 3 வருடங்களே ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவுரி கோட்சே, பொதுவாக கணவன்-மனைவி இருவரில் யாரோ ஒருவர் மண முறிவு பெற வேண்டி நீதிமன்றத்தை நாடும்போது அவர்களுக்கு இடையில் சமரசம் ஏற்படுத்த நீதிமன்றம் முயலும். அதுவே தம்பதி கலந்து பேசி பிரிவதெனத் தீர்க்கமாக முடிவெடுத்த பிறகு அதனை நியாயமான முறையில் நீதிமன்றம் அணுக வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் இளம் தம்பதியினர் என்பதால் அவர்களது விவாகரத்து கோரிக்கையை நிலுவையில் வைப்பதால் அவர்களுக்கு மன வேதனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரும்போது 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தைத் தளர்த்தி மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபட உதவுவது நீதிமன்றத்தின் கடமையாகும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரிய தம்பதிக்கு 6 மாத காத்திருப்பு தேவையில்லை என்று முடிவெடுத்து விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Readmore: மீண்டும் பெட்ரோல்-டீசல் கார்களுக்கு மாறும் EVஉரிமையாளர்கள்!. ஆய்வில் தகவல்!

Tags :
mumbai high courtMutual DivorceNo forced waiting
Advertisement
Next Article