மட்டன் பிரியரா நீங்கள்?? மட்டனின் இந்த பகுதியை சாப்பிட்டு, உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்..
மட்டன் ஒரு சிலருக்கு பிடிக்காது. ஆனால் சிக்கன் மிகவும் பிடிக்கும். ஆனால், சிக்கனை விட மட்டனில் அதிக சத்துக்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆட்டு ஈரலில் உள்ள சத்துக்கள் அநேகம். ஆட்டு ஈரலில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகமாக உள்ளது. வைட்டமின் A, B, B12, பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், செலினியம் உள்ளிட்ட தாதுக்களின் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், சிக்கன் மட்டும் மாட்டிறைச்சியின் கல்லீரலை விட, ஆட்டு கல்லீரலில் தான் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது..
இந்த ஆட்டு கல்லீரலை தொடர்ந்து சாப்பிடுவதால், பெண்களின் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, மெனோபாஸ் அடைந்த பிறகு, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்க ஆட்டு கல்லீரல் மிகவும் உதவியாக இருக்கும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை சாப்பிடுவது அவசியம். மேலும், இதில், போலிக் அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால், புதிய ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கப்படும்.
கல்லீரலிலுள்ள கால்சியம் சத்துக்கள், நம்முடைய எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது. ஆனால் இதில், கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால், இத்தனை சமைக்கும் போது, நிறைய பூண்டு சேர்த்து சமைக்க வேண்டும். மேலும், கல்லீரலில் வைட்டமின் B சத்துக்கள் அதிகம் உள்ளதால், மன அழுத்தம் நீங்கும். ஒரு வேலை நீங்கள், உடல் எடை குறைக்க முயற்சித்தல் ஆட்டு கல்லீரலை 419 கிராம் அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். கருவிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்க, கர்ப்பிணி பெண்கள், ஆட்டு ஈரலை தொடர்ந்து சாப்பிடலாம். ஆனால், இதில் வைட்டமின் A உள்ளதால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.
குறிப்பு: நீங்கள் கல்லீரலை சமைக்கும் போது, அதிக எண்ணெய் சேர்த்து வறுத்தும் சாப்பிட கூடாது. அதற்க்கு பதில், அதிக பூண்டு, தேவையான மசாலா சேர்த்து வேகவைத்து சாப்பிட்ட வேண்டும். அப்போது தான் அதன் முழு சத்துக்கள் கிடைக்கும்.
Read more: தொடைக்கு இடையில் உள்ள படர்தாமரை உங்களை பாடாய் படுத்துகிறதா? மூன்றே நாளில் குணமாக சூப்பர் டிப்ஸ்..