உருமாறிய குரங்கம்மை வைரஸ்..!! பிறப்புறுப்புகளுக்கும் பயங்கர பாதிப்பு..!! மக்களே உஷார்..!! அறிகுறிகள் என்ன..?
பிரான்சுக்குப் பிறகு, சீனாவில் புதிய வகை மங்கிபாக்ஸ் வைரஸான கிளேட் 1பி அடையாளம் காணப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது உருமாற்றமடைந்த குரங்கம்மை வைரஸின் புதிய வெர்ஷன் கண்டறியப்பட்டுள்ளது. காங்கோ நாட்டுக்கு சென்றுவந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிட்ட ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இந்த வைரஸை 1பி என சீனா அடையாளப்படுத்தியுள்ளது. இந்த வைரஸை பொறுத்தவரை தொற்று இருப்பவர்கள், மற்றவர்களை தொட்டாலே பரவும் என்று கூறப்படுகிறது.
குரங்கம்மையின் அறிகுறிகள் :
* அதிக காய்ச்சல்
* தொண்டை புண்
* தலைவலி
* தசைவலி
* முதுகுவலி
* உடல் வீக்கம்
* நடுக்கம்
* முதுகுவலி
* குறைந்த ஆற்றல்
* வீங்கிய நிணநீர் முனைகள்
மேலும் சில நாட்களுக்குள், ஒரு சொறி பொதுவாக தோன்றும். இது தட்டையான சிவப்பு புள்ளிகளாகத் தொடங்கி திரவத்தால் நிரப்பப்பட்ட கொப்புளங்கள் அல்லது கொப்புளங்களாக உருவாகி பின்னர் மேலோடு உதிர்ந்து விழும். இந்த சொறி பெரும்பாலும் முகம், கைகள் அல்லது கால்களில் தொடங்கும்.
ஆனால், பிறப்புறுப்புகள் உட்பட உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். Mpox அறிகுறிகள் பொதுவாக 2-4 வாரங்கள் நீடிக்கும். குரங்கம்மை அல்லது மங்கி பாக்ஸ் என்பது ஒரு அரிய வகை வைரஸ் தொற்றாகும். பெரியம்மை உண்டு செய்யும் வைரஸ் போன்று இது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தை சேர்ந்தது. முதலில் இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும். பின்னர், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.
Read More : அதிகமாக விரும்பி சாப்பிடும் பிஸ்தா..!! ஆபத்தும் அதிகம்..!! ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட்டால் நல்லது..?