முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"விஜய் மகன் மாதிரி ஒருத்தர நான் பார்த்ததே இல்ல" பிரபல இசையமைப்பாளர் அளித்த தகவல்..

music director reveals about jason sanjay
07:31 PM Jan 09, 2025 IST | Saranya
Advertisement

லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் நிலையில், தமன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், ஜேசன் குறித்து, இசையமைப்பாளர் தமன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். எப்படியும் ஜேசன் நடிகராவார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அவர் இயக்குநராகும் முடிவை எடுத்துள்ளார். இயக்கம் சம்பந்தமான படிப்பை கனடாவில் படித்த அவர், ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார்.

Advertisement

கடந்த வருடம், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் முதல் படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஜீவா, கவின் உள்ளிட்ட பலரிடமும்ஜேசன் கதை சொன்னதையடுத்து, அவர்கள் படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். ஒருகட்டத்தில் இந்தப் படத்தை லைகா நிறுவனம் ட்ராப் செய்துவிட்டது என்ற தகவல்கள் பரவியது. இதையடுத்து, தனது படத்தில் சந்தீப் கிஷனை ஹீரோவாக ஜேசன் நடிக்க வைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. படத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் ஜேசன் குறித்து இசையமைப்பாளர் தமன் ஒரு பேட்டியில் கூறும்போது, "ஜேசன் சஞ்சய்யை நினைத்து நான் இன்னமும் ஆச்சரியத்திலிருந்து மீளவில்லை. பொதுவாக பெரிய ஹீரோக்களின் மகன்கள் ஹீரோக்களாக ஆசைப்படுவார்கள். ஆனால் இவர் எப்படி இயக்குநர் துறையை தேர்ந்தெடுத்து அதில் இவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறார் என்று அடிக்கடி தோன்றும். ஏனெனில் அவர் சொன்ன கதை அப்படி. அந்த கதைக்கு பெரிய ஹீரோக்களின் தேதிகள் கூட எளிதாக கிடைக்கும். ஆனால் சந்தீப் கிஷன் தான் இந்தக் கதைக்கு சரியானவர் என்று அவர் உறுதியாக இருந்தார்.

கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும். விஜய்யின் மகன் என்ற கர்வம் துளிக்கூட இல்லாமல், அவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவர மாதிரி ஒருத்தர நான் பார்த்ததே இல்ல. அந்த படத்துக்கு சிறப்பான இசையை கண்டிப்பாக கொடுப்பேன்" என்றார்.

Read more: அறிவுத்திறன் குறைவாக இருந்தால் தாயாக கூடாதா..? – கருக்கலைப்பு வழக்கில் பாம்பே நீதிமன்றம் அதிரடி

Tags :
lycasandeepsanjaythamanvijay
Advertisement
Next Article