தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்..!!
தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்ட நிலையில், புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெ இறையண்பு தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா செயல்பட்டு வந்தார். ஓராண்டுக்கும் மேலாக அவர் அந்த பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிவ்தாஸ் மீனா தமிழகத்தின் 49வது தலைமை செயலாளராக செயல்பட்டு வந்த நிலையில், அடுத்து வருபவர் 50 வது தலைமை செயலாளராவார். இதனாலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 1991-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான முருகானந்தம் தற்போது முதலமைச்சரின் முதன்மை செயலாளராக உள்ளார்.
Read more ; சீனா-பிலிப்பைன்ஸ் இடையே மீண்டும் மோதல் அதிகரிப்பு!. தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம்!