சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் முருகனின் சக்தி வாய்ந்த மந்திரங்கள்.! தினமும் பூஜையில் சொல்லி பாருங்கள்.!
சுப்பிரமணியன், கந்தன், கார்த்திகேயன், குகன், முருகன் என்ற பல பெயர்களை பெற்றவர் முருகப்பெருமான். பல பெயர்கள் இருந்தாலும் அதிகமான பக்தர்கள் இவரை முருகன் என்று தான் அழைத்து வருகின்றனர். போர் கடவுளாக கருதப்பட்டு வரும் முருகன் வீரம், வெற்றி, தன்னம்பிக்கை போன்ற சக்திகளின் கடவுளாகவும் இருந்து வருகிறார். அண்டைய காலத்திலிருந்து வழிபட்டு வரும் முருகனை 'தமிழ் கடவுள் என்றும் அழைத்து வருகின்றோம்.
நம் தமிழ் கோயில்களில் முருகனின் திருநாமங்கள் பல போற்றப்பட்டு வருகின்றன. இந்த திருநாமங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருவது சுப்ரமணியன் திருநாமம் தான் இதில் 'சு' என்ற எழுத்திற்கு அதி உன்னதமானவன் என்றும், 'ப்ரமணியன்' என்ற வார்த்தைக்கு பிரம்ம ஞானத்தை கொண்டவன் என்றும் பொருள் படும். "சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனிற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்று பழமொழியும் உண்டு.
அந்த அளவிற்கு முருகன் சக்தி வாய்ந்த கடவுளாக கருதப்பட்டு வருகிறார். இதன்படி முருகனின் இந்த முக்கியமான திருநாமத்தை கூறும் போது அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்று நம்பப்பட்டு வருகிறது. அவை என்னென்ன மந்திரங்கள் என்பது குறித்து பார்க்கலாம்?
- மூல மந்திரம் - ஓம் சரவண பவாய நமக
- துன்பம் போக்கும் மந்திரம் - ஓம் சரவணா பாவாய நமஹஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா ஓம் சுப்ரமண்யாய நமஹ.
- வாழ்வில் முன்னேற்றம் தரும் மந்திரம் - ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹிதந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
- நோய் நொடி தீர்க்கும் மந்திரம் - ஓம் பாலசுப்ரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வரவர சுவாஹா!
இந்த மந்திரங்களை தினமும் காலையிலும், மாலையிலும் பூஜை செய்யும் போது சொல்லி வந்தால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும்.