போலீஸ் கண்முன்னே கழுத்தறுத்துக் கொலை..!! பஞ்சாயத்து பேச அழைத்துச் சென்றபோது நேர்ந்த பரிதாபம்..!! ஸ்டேஷன் முன்பு வெடித்த போராட்டம்..!!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கைகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரும், அருணுக்கு சொந்தமான இடத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.
அப்போது, தேவேந்திரனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. காணும் பொங்கலன்று கைகளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகளின் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேவேந்திரன் மீது மணிகண்டன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். பின்னர், தேவேந்திரனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார், மணிகண்டன் இருக்கும் இடத்திற்கு தேவேந்திரனை அழைத்துச் சென்று சமாதானம் பேச ஏட்டு ஸ்ரீதர் முயன்றுள்ளார்.
அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில், ஏட்டு ஸ்ரீதர் முன்னிலையிலேயே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தை தேவேந்திரன் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஏட்டு, தேவேந்திரனை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, மணிகண்டன் கொலைக்கு உரிய நீதி கேட்டு அவரது உடலை காவல் நிலையம் முன்பு வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.