முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்"- எடப்பாடி பழனிசாமி..!

'Murder is common in DMK regime'- Edappadi Palaniswami..!
01:50 PM Nov 20, 2024 IST | Kathir
Advertisement

தஞ்சாவூர் மாவட்ட பட்டுக்கோட்டை தாலுக்காவில் கடலோர கிராமமாக அமைந்துள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே மதன் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மதனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

30 வயதான மதன்குமார், ஆசிரியை ரமணியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். மேலும் வரை பெண் கேட்டு வீட்டுக்கும் சென்றபோது ரமணியின் பெற்றோர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மதன் குமார் ரமணி பணிபுரியும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ரமணியை கண்டதும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் ரமணி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பள்ளியில் இருந்த சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறியொத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கன்னியில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடிபழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், "தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விடியா திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Read More: கடன் வாங்கியவர் திடீரென இறந்துவிட்டால் அந்த கடனை யார் செலுத்த வேண்டும்..? இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்..?

Tags :
edapadi p[alanisamyepseps about teacher murdertrichy teacher murder case
Advertisement
Next Article